உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.டி.சி.ஏ. டிவிஷன் போட்டிகளில் விக்கெட் குவித்து வீரர்கள் அபாரம்

சி.டி.சி.ஏ. டிவிஷன் போட்டிகளில் விக்கெட் குவித்து வீரர்கள் அபாரம்

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில், இரண்டாவது டிவிஷன் போட்டிகள், பி.எஸ்.ஜி., - ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகின்றன. காஸ்மோ விலேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும், ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. முதலில் 'பேட்டிங்' செய்த காஸ்மோ ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினர், 37.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 96 ரன் எடுத்தனர். வீரர் நவீன்குமார், 33 ரன் எடுத்தார். எதிரணி வீரர் நித்வின் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர், 33.5 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 97 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் கவுதம் மூன்று விக்கெட் வீழ்த்தினார். நான்காவது டிவிஷன் போட்டி சூர்யபாலா மைதானத்தில் நடக்கிறது. சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியும், சாம் கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியினர், 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 240 ரன் எடுத்தனர். வீரர் விக்னேஷ்வர், 74 ரன், திலீப்குமார், 59 ரன் எடுத்தார். சாம் அணி வீரர்கள், 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 222 ரன் எடுத்தனர். வீரர் சுரேஷ், 93 ரன், விஜய பாரதி, 39 ரன் எடுத்தார். எதிரணி வீரர்கள் சரவணகுமார் நான்கு விக்கெட்களும், திருப்பதி மூர்த்தி மூன்று விக்கெட்களும் வீழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ