மாநில சதுரங்க போட்டியில் லேப்டாப் வென்ற வீரர்கள்
கோவை; பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியின் உடற்கல்வித் துறை சார்பில், மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. இதில், 7, 9, 11, 13, 15, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 193 மாணவியர், 250 மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் ஹாரதி போட்டிகளை துவக்கிவைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டு லேப்டாப்கள், 242 பரிசுகள், 60 பதக்கங்கள், 182 டிராபிகள் வழங்கப்பட்டன. 7 வயதுக்குட்டோர் பிரிவில் சாம்பியன்ஷிப் வென்ற மாணவ, மாணவியருக்கு தலா ஒரு லேப்டாப் வழங்கப்பட்டது. புள்ளிகள் அடிப்படையில் முதல், 20 பேருக்கு சான்றிதழ்கள், புத்தகம், பதக்கங்கள், டிராபிகள் பரிசாக அளிக்கப்பட்டன. குறிப்பாக, இளம் தலைமுறையினருக்கு பரிசு வழங்கப்பட்டது. மாநில செஸ் சங்க துணை தலைவர் விஜயராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள், போட்டிகளை நடத்தினர்.