நேஷனல் மாடல் பள்ளியில் விளையாட்டு மைதானம் திறப்பு
கோவை; கருமத்தம்பட்டி, நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் விளையாட்டு மைதான திறப்பு விழா மற்றும் 2024--25ம் ஆண்டுக்கான விளையாட்டு விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற லெப்டினன்ட் கர்னல் கிரிஷ் பார்த்தன், மைதானத்தை திறந்து வைத்தார். மாணவர் அணிகளின் அணிவகுப்பை தொடர்ந்து, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. 100 மற்றும் 80 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பெற்றோர்களுக்கும் லக்கி கார்னர் போட்டி நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் கல்வி இயக்குனர் பேபி, முதல்வர் நிர்மலா, ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா, ஆசிரியர்கள் பங்கேற்றனர். ---கருமத்தம்பட்டி நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி விளையாட்டு விழாவில், லெப்டினன்ட் கர்னல் கிரிஷ் பார்த்தன் மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.