உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களின் அரசியல் அமைப்பு விழிப்புணர்வு பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு

மாணவர்களின் அரசியல் அமைப்பு விழிப்புணர்வு பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு

- நிருபர் குழு -அரசுப்பள்ளிகளில், இந்திய அரசியல் அமைப்பு நாள் விழாவையொட்டி, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணி திட்டம், தேசிய பசுமைப்படை சார்பில் இந்திய அரசியல் அமைப்பு நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் (பொறுப்பு) சரவணன் தலைமை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் கணேசபாண்டியன் வரவேற்றார். அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார், இந்திய அரசியலமைப்பு நாள் விழாவின் நோக்கமும், அவசியமும் குறித்து பேசினார்.என்.எஸ்.எஸ்., மாணவி இந்துமதி நன்றி தெரிவித்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஆசிரியர் ஜான்பாஷா நன்றி தெரிவித்தார்.* ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், இறைவணக்க கூட்டத்தில் தலைமையாசிரியர் தங்கவேல், ஆசிரியர் கல்பனா மற்றும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.* காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தின விழாவையொட்டி, மாணவர்களுக்கு வினாடி-வினா, பேச்சுப்போட்டிகள் நடந்தன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை அணிகளைச்சேர்ந்த மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் வசந்தராணி, பாப்புகுட்டி, வஞ்சிமுத்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். ஆசிரியர்கள் நாகவேணி, லலிதாபரமேஸ்வரி, லதா, ருக்குமணி உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். குறிஞ்சி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.

பொள்ளாச்சி

*பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 75வது தினம் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் தினகரன் தலைமை வகித்தார்.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து, அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர். ஆசிரியை சத்யா, அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவம், பயன்பாடு, மக்களாட்சி தத்துவங்கள், உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு சட்டம் தரும் பாதுகாப்பு குறித்து பேசினார்.மாணவர்கள், அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பு மாதிரியை உள்ளடக்கிய பதாகைகளை, கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். மக்களிடையே அரசியல் அமைப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.* தமிழ்நாடு காங்., கட்சி சார்பில், பொள்ளாச்சி காந்தி சிலை முன், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பகவதி, பொள்ளாச்சி தெற்கு வட்டார தலைவர் செல்வகுமார், மாவட்ட துணைத் தலைவர் வித்யாசாகர், நகர தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை