மேலும் செய்திகள்
பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு!
06-Sep-2025
புதுடில்லி : சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட பதிவு: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் உடனான உரையாடல் நன்றாக இருந்தது. பல்வேறு விவகாரங்களில் இருதரப்பு உறவுகள் குறித்து, அவருடன் விவாதித்தேன். உக்ரைனில் மோதலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் உட்பட, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில், இந்தியா - -பிரான்ஸ் கூட்டணி தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில், அமெரிக்க அதிபர் டிரம்பை சமீபத்தில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் நடந்த விஷயங்களை, பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.
06-Sep-2025