உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்துக்கு இடையூறாக கம்பங்கள்

போக்குவரத்துக்கு இடையூறாக கம்பங்கள்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை, அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கண்காணிப்பதில்லை என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம், தங்களது 'இன்டர்நெட்' சேவையை விரிவுபடுத்தும் வகையில், பொள்ளாச்சி நகரில், வீதிகள் தோறும், கம்பங்களை நட்டி, கேபிள் இணைப்புகளை வழங்கி வருகிறது.அந்த கம்பங்கள் பெரும்பாலும், மின்கம்பங்களுக்கு அருகிலேயே நடப்பட்டுள்ளன. சில குறுகிய வீதிகளில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், கனரக வாகனங்கள் கடந்து செல்லும் வழித்தடத்தில் தாழ்வாகவும் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன், நகராட்சிக்கு உரிய தொகை செலுத்தி, கம்பங்கள் அமைக்கப்பட்டும், அவைகளை முறைபடுத்த அதிகாரிகள் முன்வரவில்லை. இதுகுறித்து, நகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பிய போது, இடையூறாக உள்ள கம்பங்களை, மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மின் இணைப்பு மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், தொலைத் தொடர்பு கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும். நகரில் ஏற்கனவே, ரோடு வரை கடைகளின் விரிவாக்கம், நடைபாதை ஆக்கிரப்பு, 'பார்க்கிங்' வசதி இல்லாமை போன்றகாரணங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இவை அனைத்தையும் அறிந்து கொண்டே, அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் மவுனமாக உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி