உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்து நோட்டீஸ் வழங்கி, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை ஒழிக்கும் நடவடிக்கையை, மேட்டுப்பாளையம் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் போதைப் பொருட்களின் தீமை குறித்து பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக, மேட்டுப்பாளையம் சி.டி.சி., காலனியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், நோட்டீஸ் வழங்கி மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை