மேலும் செய்திகள்
புகார் அளிக்க அழைப்பு
09-May-2025
கோவை: கோவையில் செயல்பட்டு வந்த 'சன்மேக்ஸ்' நிறுவனத்தில், முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வருமாறு, போலீசார் தெரிவித்தனர்.இது குறித்து, கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் செய்தி குறிப்பு:முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி, பலரிடம் மோசடி செய்ததாக கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகில் செயல்பட்டு வந்த, 'சன்மேக்ஸ்' நிறுவனத்தின் மீதும், அதன் முதன்மை செயல் அதிகாரிகள் சிவராமகிருஷ்ணன் மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் மீதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.'சன்மேக்ஸ்' நிறுவனத்தில், பணத்தை முதலீடு செய்து திரும்ப கிடைக்காமல் பலர் உள்ளனர். இந்நிலையில் அந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், தங்களின் அசல் ஆவணங்களுடன் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
09-May-2025