உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோதனைச்சாவடி, மக்களை துன்புறுத்தும் வேதனை சாவடியாக மாறக்கூடாது போலீஸ் கமிஷனர் பேச்சு

சோதனைச்சாவடி, மக்களை துன்புறுத்தும் வேதனை சாவடியாக மாறக்கூடாது போலீஸ் கமிஷனர் பேச்சு

பெ.நா.பாளையம்:சோதனை சாவடி, மக்களை துன்புறுத்தும் வேதனை சாவடியாக மாறக்கூடாது' என்று போலீஸ் கமிஷனர் கூறினார்.துடியலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அசோகபுரம் மற்றும் ராக்கி பாளையம் பிரிவில், பொதுமக்களின் பாதுகாப்புக்காக தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன், இரண்டு புதிய சோதனை சாவடிகள், 'சிசிடிவி' கேமராக்களுடன் அமைக்கப் பட்டுள்ளன. இதை கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பேசுகையில், கூகுள் மேப் உதவியுடன், எந்தெந்த பகுதியில் 'சிசிடிவி' கேமரா இல்லை என்பதை அறிந்து, அந்த இடங்களில் கேமராக்களை பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் இரண்டு கேமராக்களை பொருத்தி, ஒன்று வீடு நோக்கியும், இன்னொன்று தெருவை நோக்கியும் அமைக்க வேண்டும். இதனால், குற்றங்களை குறைத்து, பாதுகாப்பை உறுதி செய்யலாம். மீறி குற்றங்கள் நடந்தாலும், அவற்றை சுலபமாக கண்டுபிடித்து உரிய நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.சோதனை சாவடி, மக்களை துன்புறுத்தும் வேதனை சாவடியாக மாறக்கூடாது. வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். இதனால் பொதுமக்களிடம் இருந்து, கூடுதல் தகவலை நம்மால் பெற முடியும் என்றார்.அசோகபுரம் மற்றும் ராக்கி பாளையம் பகுதிகளில், 40 இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை துடியலூர் போலீஸ் ஸ்டேஷ னுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகளை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார்.சோதனை சாவடி திறப்பு விழாவில், உதவி கமிஷனர் சரவணகுமார், சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் ரத்தினகுமார், ராஜேஷ், சரவணன், மாவட்ட கவுன்சிலர் கார்த்தி, கவிதாசன் அசோகபுரம் ஊராட்சி தலைவர் ரமேஷ், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ