உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேமரா பொருத்த போலீசுக்கு நேரமில்லை! பொதுமக்கள் அதிருப்தி

கேமரா பொருத்த போலீசுக்கு நேரமில்லை! பொதுமக்கள் அதிருப்தி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், கட்டமைப்புகள் இருந்தும், கேமரா இல்லாத இடத்தில் புதிதாக கண்காணிப்பு கேமரா நிறுவ வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி, உட்கோட்டத்தில், குற்ற சம்பவங்களைக் கண்டறிந்து தடுக்க, பிரதான ரோடு சந்திப்பு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை, பஸ் ஸ்டாண்ட் என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.கேமராக்களின் பதிவுகளை கண்டறிய, ஏ.எஸ்.பி., அலுவலக வளாகத்தில், நவீன கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை வாயிலாக, 200க்கும் மேற்பட்ட கேமாராக்களை ஒரே இடத்தில் இணைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.குறிப்பாக, பொள்ளாச்சி கிழக்கு, தாலுகா, மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, 100 கண்காணிப்பு கேமராக்கள், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை விரைந்து கண்டறிய முடிவதுடன், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள முடிகிறது.அதேநேரம், மகாலிங்கபுரம், கண்ணகி வீதி உள்ளிட்ட சில பகுதிகளில், பொருத்தப்பட்ட கேமராக்கள், பயன்பாடின்றி காணப்படுகின்றன. குறிப்பாக, கட்டமைப்புகள் இருந்தும் கேமரா இல்லாமல் காணப்படுகிறது. இங்கு, புதிய கேமரா நிறுவி, போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில், 'குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பெரிதும் உதவுகிறது. நகர்ப்புறம் மட்டுமின்றி, கிராமங்கள்தோறும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவ்வகையில், ஏற்கனவே கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட இடத்தில் புதிதாக கேமரா பொருத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி