உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஜம்மென்று மாறியது போலீஸ் ஜிம் ; பொதுமக்களும் பயன்படுத்தலாம்

 ஜம்மென்று மாறியது போலீஸ் ஜிம் ; பொதுமக்களும் பயன்படுத்தலாம்

கோவை; உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே, நோய்களில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்து, இன்று பெரும்பாலான மக்கள், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த துவங்கியுள்ளனர். மற்றவர்களை விட போலீசாருக்கு, உடற்பயிற்சி அவசியமானதாக உள்ளது. கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில், பல ஆண்டுகளாக போலீஸ் ஜிம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய வசதிகள் இல்லை என புகார்கள் எழுந்தன.தற்போது தனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது. நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசார் தவிர, பொதுமக்களும் இந்த உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்தலாம் என இப்போது அறிவித்துள்ளனர். போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பழைய உடற்பயிற்சிக்கூடம் 40 லட்சம் ரூபாய் செலவில் முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான நவீன உபகரணங்களும் இங்கு உள்ளன. ஒரே நேரத்தில், 40 பேர் வரை உடற்பயிற்சி செய்யலாம். போலீசாருக்கு மூன்று மாதத்துக்கு ரூ.500, பொதுமக்களுக்கு மூன்று மாதத்துக்கு ரூ.750 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 6:00 முதல் 10:00 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரையும் பயிற்சி செய்யலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை