உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

புகையிலை பதுக்கியவர்கள் கைது

ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுாரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, டீக்கடை அருகே சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், வேட்டைக்காரன்புதுார் பிரித்திவ் ராஜன்,36, பத்மாவதி,55 ஆகியோர் என்றும், விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், ஒரு கிலோ, 430 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

லாட்டரி விற்றவர் கைது

பொள்ளாச்சி அருகே, சோமந்துறை சித்துார் பகுதியில் கோட்டூர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி வாகனத்துடன் நின்ற நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், சோமந்துறை சித்துாரை சேர்ந்த விஸ்வநாதன்,47, என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 84 லாட்டரி சீட்டுகள், வாகனம், மொபைல்போன், 550 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பைக் திருடிய 4 பேர் கைது

பொள்ளாச்சி லட்சுமி நகரை சேர்ந்த கோழிக்கடை தொழிலாளி சபரீஸ்வரன், 29. இவர், கடந்த, 8ம் தேதி இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் காணவில்லை.இது குறித்து அவர், தாலுகா போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், குள்ளக்காபாளையம் பிரிவு அருகே தாலுகா போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கவிராஜ்,20, துணைவன் என்கிற ஆகாஷ், 21, சிவசஞ்சய்,21, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த யுகப்பிரதீப்,20, ஆகியோர் என்பதும், இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை