மேலும் செய்திகள்
மலையடிவார தோப்புகளில் யானைகள் நடமாட்டம்
08-Oct-2024
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடை அருகே சீலியூரில், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம், சார்பில் மாநிலத் தலைவர் பாபு தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் பாபு பேசியதாவது:-கோவை மாவட்டம் தடாகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பன்னிமடையில், போலீசார் விவசாயி ஒருவரின் தோட்டத்திற்குள் சென்று, அங்கு உள்ள தென்னை மரத்திலிருந்து, நீரா பானம் எடுக்கும் மண்பானைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்கள். மேலும் அங்கு வைத்திருந்த பிளாஸ்டிக் குடங்கள், விவசாயத்திற்கு பயன்படக்கூடிய சில இடுபொருட்கள் அனைத்தையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்கள். பணத்தையும் எடுத்து சென்றுள்ளார்கள். அத்து மீறி அடாவடித்தனம் செய்த போலீசாரின் நடவடிக்கையை கண்டிக்கிறோம்.கடந்த 2009ம் ஆண்டு முதல் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் மற்றும் கள் இறக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு போராடி வருகிறோம். விவசாயிகளை மிரட்டி, தேவையின்றி கடும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்று நடந்தால், போலீஸ் ஸ்டேஷன்களை விவசாய சங்கத்தின் சார்பாக முற்றுகையிடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
08-Oct-2024