மேலும் செய்திகள்
ரூ.15 கோடி மதிப்புள்ள போதை பொருள் அழிப்பு
15-Aug-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷனில், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் அழித்தனர். பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதியின்றி கள்ள சந்தையில் மதுவிற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த, ஆறு மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்க கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோவை எஸ்.பி. கார்த்திக்கேயன் உத்தரவின்படி நேற்று அழிக்கப்பட்டன. போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் குழி தோண்டப்பட்டு மது பாட்டில்களில் இருந்து மதுவை குழியில் ஊற்றி அழித்தனர். எஸ்.ஐ. பழநி, கோட்ட கலால் மேற்பார்வை அலுவலர் அரசகுமார், கோட்ட கலால் அலுவலர் சிவக்குமார் மற்றும் போலீசார் முன்னிலையில் மதுபானம் அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மொத்தம், 1,451 மதுபாட்டில்களில் இருந்த மது கீழே கொட்டி அழிக்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
15-Aug-2025