உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆபாச பேனர் அகற்றம்; போலீசார் அதிரடி

ஆபாச பேனர் அகற்றம்; போலீசார் அதிரடி

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே மேட்டுப்பாளையம் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த ஆபாச பேனரை போலீசார் அகற்றினர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ளாடை குறித்த பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஆபாச பேனரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்பது குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக போலீசாரின் கவனத்துக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் ஆபாச பேனரை உடனடியாக அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை