உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி திருவிழா; பேட்மின்டன் போட்டி

பொள்ளாச்சி திருவிழா; பேட்மின்டன் போட்டி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி திருவிழா, பேட்மின்டன் போட்டியில் மாணவர்கள் அசத்தினர்.பொள்ளாச்சியின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த மாதம், தொழில்வர்த்தக சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், 'பொள்ளாச்சி திருவிழா' நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில், திஷா பள்ளியில், பேட்மின்டன் போட்டிகள் நடைபெற்றன.பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், மதுரையை சேர்ந்த, 260 பேர் பங்கேற்றனர். போட்டிகள், எட்டு வயதுக்கு உட்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர், 12, 14,16 வயதுக்கு உட்பட்டோர் என, ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. மாணவர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை