உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் தொகுப்பு இன்றுடன் கடைசி

பொங்கல் தொகுப்பு இன்றுடன் கடைசி

கோவை; பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி இன்றுடன் முடிகிறது. வாங்காத ரேஷன் கார்டுதாரர்கள், இன்று வாங்கிக் கொள்ளலாம்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு, பொங்கல் தொகுப்பாக வழங்ப்படும் என, தமிழக அரசு அறிவித்து இருந்தது.கடந்த 9ம் தேதி முதல், ரேஷன்கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது. கோவையில் மாவட்டத்தில் இதுவரை, 80 சதவீத கார்டுதாரர்கள் மட்டுமே, பொங்கல் தொகுப்பு வாங்கி உள்ளனர். பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி, இன்று (18ம் தேதி) முடிகிறது. அதனால், வாங்காதவர்கள் நாளை(இன்று) ரேஷன் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராஜேந்திரன் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை