மேலும் செய்திகள்
பொங்கல் கொண்டாட்டம்; 'பொங்கிய' உற்சாகம்
14-Jan-2025
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தைப்பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தைப்பொங்கல் திருநாளான நேற்று அதிகாலையிலேயே, பொதுமக்கள் தங்களின் வீடுளில், புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பச்சரிசி பொங்கல் வைத்து, சூரியனை குடும்பத்துடன் வழிபட்டனர்.தொடர்ந்து, கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின், ஊர் மைதானங்களில், பொங்கல் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டிருந்த பொம்மை கடைகள், பொங்கல் விளையாட்டு கடைகளில், பொருட்களை வாங்கியும், ராட்டினத்தில் விளையாடியும், பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.
14-Jan-2025