உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் விழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு

பொங்கல் விழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு

-- நிருபர் குழு -பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.* பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில், விசாலாட்சி அம்மன், ஜோதிலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.* கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி மாதத்தையொட்டி, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தை மாதம் பிறப்பு மற்றும் பொங்கல் விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இதில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கரிவரதராஜ பெருமாள், திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.* சூலக்கல் மாரியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவில், கடைவீதி பால கணேசர் கோவில், அழகு நாச்சியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கிணத்துக்கடவு

* கிணத்துக்கடவு சிவலோகநாயகி உடனமர் சிவலோக நாதர் கோவில், பொங்கல் நாளான நேற்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.* எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறைநாதர் கோவிலில், பொங்கல் சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வால்பாறை

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை, 7:00 மணிக்கு அபிேஷக பூஜை், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு, முருகப்பெருமானை வழிபட்டனர்.* ஈட்டியார் எஸ்டேட் மாரியம்மன் கோவிலில், 45ம் ஆண்டு திருவிழா, கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜையும் நடந்தது. முக்கிய நிகழ்வாக இன்று இரவு, 12:00 மணிக்கு மாடசாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.* கல்லார் எஸ்டேட் மாரியம்மன் கோவிலின், 66ம் ஆண்டு திருவிழா கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.* பச்சமலை எஸ்டேட் தெற்கு மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். அனைத்து கோவில்களிலும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவதால், எஸ்டேட் பகுதி களைகட்டியுள்ளது.

உடுமலை

* உடுமலை நகரம் மற்றும் கிராமப்புறங்களிலுள்ள கோவில்களில், மக்கள் இணைந்து பொங்கல் வைத்து, சுவாமிகளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர். கிராம கோவில்களில் காப்புக்கட்டி, பொங்கலிட்டு, உற்சாகமாக ஆடி, பாடி விழாவை கொண்டாடினர். பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் செய்து, சுவாமிக்கு புத்தாடைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடந்தது.* உடுமலை மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், முருகன் கோவில், தலைகொண்டம்மன் கோவில், மாலையம்மன் கோவில் என அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை