உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி, கருமத்தம்பட்டிபுதுாரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானவை. கடந்தாண்டு நடந்த கும்பாபிஷேகத்துக்கு பின், முதல் பூச்சாட்டு திருவிழா கடந்த 13ம் தேதி துவங்கியது. நேற்று, கருமத்தம்பட்டிபுதுாரில் இருந்து கருமத்தம்பட்டி வரை ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏந்தி வந்தனர். பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து ஸ்ரீ மாரியம்மனுக்கும், ஸ்ரீ மாகாளியம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை