உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தபால் ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம்

தபால் ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம்

பொள்ளாச்சி, ; வரும் ஜன., மாதம், தபால் ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவுள்ளதால், ஓய்வூதியர்கள் தங்களது மனுக்களை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் அறிக்கை:தபால் ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம், வரும் ஜன., 16ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. ஜன., 10ம் தேதி வரை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெறப்படும் மனுக்கள் பரீசிலிக்கப்படும்.கூட்டத்தில், ஆலோசிப்பதற்கான, குறைகள் மற்றும் ஆலோசனைகளை, 'தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், பொள்ளாச்சி கோட்டம், பொள்ளாச்சி - 602001' என்ற முகவரிக்கு, தபாலில் அனுப்ப வேண்டும். அல்லது dopollachi.indiapost.gov.inஎன்ற இ---மெயிலில் அனுப்ப வேண்டும்.தபாலின் உறை மீதும், இ-மெயில் பொருளிலும் 'பென்ஷன் அதாலத்' என்று குறிப்பிட வேண்டும். வாரிசுதாரர் போன்ற சட்ட ரீதியான குறைகள், அதாலத்தில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. மேலும், கொள்கை சம்பந்தப்பட்ட குறைகளை அதாலத்தில் எடுத்துக் கொள்ள முடியாது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !