உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை நகர சுவர்களை அலங்கோலமாக்கும் போஸ்டர்கள்

 கோவை நகர சுவர்களை அலங்கோலமாக்கும் போஸ்டர்கள்

கோவை: மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேம்பாலங்கள், அரசு அலுவலக சுவர்கள், தனியார் கட்டட சுவர்கள் என காணும் இடங்களில் எல்லாம், போஸ்டர்கள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் தான் பிரதானமாக உள்ளன. இதுதவிர, தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், தனி நபர்களின் புகழ் பாடும் போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்படுகின்றன. இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தினரின் பார்வைக்கு, இன்னும் இந்த போஸ்டர்கள் செல்லவில்லை போல!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை