ரோடு சேதம் பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் இருந்து பணிகம்பட்டி செல்லும் ரோட்டின் நடுவே, பள்ளம் போன்ற குழி ஏற்பட்டுள்ளதால், இவ்வழியாக செல்லும் மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து, ரோட்டை சீரமைப்பு செய்ய வேண்டும். -- டேவிட்: குப்பையை எடுங்க கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் பின்புறம், நாளுக்கு நாள் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. இத்துடன் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து குப்பையை அகற்றம் செய்ய வேண்டும். -- கருணாகரன்: கிடப்பில் போடப்பட்ட பலகைகள் வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், சாலையோரம் வழிகாட்டி பெயர் பலகைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வால்பாறை நகருக்குள் வரும் மக்களுக்கு, எது எந்தப் பகுதி என தெரியாமல் போவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, பெயர் பலகையை உரிய இடத்தில் வைக்க வேண்டும். -- விமல்: சேதமடைந்த ரோடு உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சி இந்திராநகரிலிருந்து சேரன்நகர் செல்லும் ரோட்டில் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே இந்த ரோட்டை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன்: தடுப்பு அமைக்கணும் நெகமம் மெயின் ரோட்டில் இருந்து, நாகர் மைதானம் செல்லும் ரோட்டோரம் தடுப்புகள் இல்லாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால், அப்பகுதியில் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறை சார்பில் விரைவில் இங்கு தடுப்பு அமைக்க வேண்டும். -- குணா: ரோட்டோரப் புதர்களை அகற்றணும் கிணத்துக்கடவு, பகவதிபாளையத்திலிருந்து சிங்காரம்பாளையம் செல்லும் ரோட்டின் இரு பகுதிகளிலும் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் ரோட்டில் செல்பவர்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பிலோ அல்லது நெடுஞ்சாலைதுறை சார்பிலோ செடிகளை அகற்ற வேண்டும். -- பாலு: உழவர்சந்தை தரை தளம் சேதம் உடுமலை உழவர் சந்தைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்களும், விவசாயிகளும் வருகை தருகின்றனர். ஆனால், சந்தையில் உள்ள தரைதளம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, தரைதளத்தை சீரமைக்க வேண்டும். - முருகன்: விபத்து அபாயம் உடுமலை தளி ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி முன் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இவை காற்றுக்கு கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சோமசுந்தரம்: குழியை சரிசெய்யணும் சோமவாரப்பட்டி அம்மாபட்டி ரோடு பிரியும் இடத்தில் மெகா குழி ஏற்பட்டு மழைநீர் தேங்கி நிற்கிறது. குழி இருப்பது தெரியாமல், அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் நிலை தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. இந்த குழியை ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கருப்பசாமி: மழைநீர் தேக்கம் உடுமலை ஏரிப்பாளையம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் முன், செஞ்சேரிமலை ரோட்டில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் பல அடிக்கு தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதை நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்ய வேண்டும். - ராஜா: வடிகாலை துார்வாரணும் உடுமலை - பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கழிவு நீர் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வடிகாலை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வம்: