உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விசைத்தறி தொழிலாளர்கள் சோமனுாரில் ஆர்ப்பாட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் சோமனுாரில் ஆர்ப்பாட்டம்

சோமனுார்; குழு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த கோரி, விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோவை மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் சோமனுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். விசைத்தறி தொழிலாளர்களுக்கான குழு காப்பீடு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், 12 மணி நேர வேலையை, எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ