உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கருமத்தம்பட்டி; பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 165 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில், 159 பேர் வெற்றி பெற்று, 96.25 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவி சுவாதி - 470, நாதஸ்ரீ - 457, மாணவன் நிரஞ்சன்- 457, ரூபிகன்- 457, விதுரா - 455, திவாகர் - 455 மதிப்பெண்கள் பெற்று அசத்தினர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை