குடியரசு தலைவர் விருது; கோவை டி.எஸ்.பி., தேர்வு
கோவை; குடியரசு தலைவர் விருதுக்கு கோவை மாநகர சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு குடியரசு தலைவர் விருதுகள் வழங்கப்படும். நடப்பாண்டுக்கான குடியரசு தலைவர் விருதுக்கு தமிழகத்தின், 21 போலீஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பாராட்டத்தக்கப்பணிக்கான விருதுக்கு கோவையை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி.,சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த, 1977 ம் ஆண்டு சட்டம், ஒழுங்கு எஸ்.ஐ., யாக பணியை துவ ங்கிய சந்திரசேகர் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது கோவை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., யாக பணிபுரிந்து வருகிறார். மலேசியா நாட்டை சேர்ந்தவரை கொலை செய்து விட்டு, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மைக்கேல் என்பவரை கைது செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்பட செயல்பட்டுள்ளார்.