உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பிரதமர் கோவை வருகை: இணைச் செயலர் ஆய்வு

 பிரதமர் கோவை வருகை: இணைச் செயலர் ஆய்வு

கோவை: தென்னிந்திய இயற்கை கூட்டமைப்பு சார்பில், வரும் 19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு, கோவை கொடிசியா வளாகத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார். இதுதொடர்பான ஏற்பாடுகள் குறித்து, மத்திய அரசின் வேளாண்துறை இணைச் செயலாளர் பிராங்ளின், கொடிசியா வளாகத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடினார். மாநாட்டு திட்டமிடல் தொடர்பாக, விவசாய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்ற வரவேற்புக் குழு கூட்டமும், ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ