மேலும் செய்திகள்
அதிகமாக மது குடித்த பெயிண்டர் சாவு
19-Jun-2025
கோவை; கோவையில் மத்திய சிறையில், கைதி பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை மத்திய சிறையில் பொள்ளாச்சி ஆனைமலை, வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த பொன்னுசாமி, 49 என்பவர் 2024ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டிருந்தார். சிறையின் 2வது பிளாக்கில் இருந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பொன்னுசாமியை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
19-Jun-2025