பள்ளி விளையாட்டு விழா வென்றவர்களுக்கு பரிசு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, பாரதிய வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 39 வது ஆண்டு விளையாட்டுப் போட்டி, புளியம்பட்டி வித்யோதயா சி.பி.எஸ்.இ., பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது.பள்ளித் தாளாளர் சாந்தா தலைமை வகித்தார். தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவ மாணவியர் இடையே கூட்டு உடற்பயிற்சி, யோகா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பின், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பிரேமானந்தி, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.