உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மர நாற்றங்கால் மேம்படுத்தினால் லாபம் அதிகரிக்கும்

மர நாற்றங்கால் மேம்படுத்தினால் லாபம் அதிகரிக்கும்

மேட்டுப்பாளையம்: மர நாற்றங்கால் உள் கட்டமைப்பு மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதன் வாயிலாக, நாற்றங்கால்களின் உற்பத்தித்திறன் மற்றும் லாபம் அதிகரிக்கும், என, வனக்கல்லூரி முதல்வர் நிஹார் ரஞ்சன் தெரிவித்தார்.மேட்டுப்பாளையம் வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மர நாற்றங்கால் தணிக்கையாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நடந்தது.சர்வதேச வனவியல் ஆராய்ச்சி, உலக வேளாண் காடுகள் மையம் மற்றும் மத்திய வேளாண் வனவியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து, இந்த பயிற்சியை நடத்தியது. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் நிஹார்ரஞ்சன் பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:தமிழகத்தில் தொடர்புடைய துறைகளைச் சார்ந்த, தொழில் வல்லுநர்களுக்கு ஆயத்தப்படுத்துவதன் வாயிலாக, சான்று அளிக்கப்பட்ட மர நாற்றங்கால் தணிக்கையாளர்களை உருவாக்குவதே, இப்பயிற்சியின் நோக்கமாகும்.நாற்றங்கால் உள்கட்டமைப்பு மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதன் வாயிலாக, வேளாண் காடுகள் வளர்ப்பை மேம்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும்.இதன் வாயிலாக நாற்றங்கால்களின் உற்பத்தித்திறன் மற்றும் லாபத்தை அதிகரிக்கும். தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வதன் வாயிலாக, விவசாயிகளுக்கு திறன் கொண்ட, வேளாண்காடுகள் அமைப்பை உருவாக்க முடியும். இவ்வாறு முதல்வர் பேசினார்.இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக இயக்குனர் அருணாசலம், விஞ்ஞானி சுரேஷ் ரமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பயிற்சியில் தமிழகம் முழுவதிலிருந்தும்வனத்துறை, தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி துறை, வேளாண் பல்கலை, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த,30 அலுவலர்கள் பங்கேற்றனர்.பயிற்சியில் சர்வதேச வனவியல் ஆராய்ச்சி மற்றும் உலக வேளாண் காடுகள் மைய மற்றும் மத்திய வேளாண் வனவியல் ஆராய்ச்சி நிலைய பிராந்திய தலைவர் அஜித் சோனாச்சலம் வரவேற்றார். மாநில தலைவர் ஜிஷ்ணு கிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை