உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகரின் பல்வேறு பகுதிகளில் விபச்சாரம்; 13 பேர் கைது

நகரின் பல்வேறு பகுதிகளில் விபச்சாரம்; 13 பேர் கைது

கோவை; கோவையில் உள்ள சில 'ஸ்பா'க்கள், தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் மாநகர் முழுவதும் சோதனை நடத்தி வந்தனர்.காட்டூர், பீளமேடு, சிங்காநல்லுார் ஆகிய பகுதிகளில் உள்ள, ஸ்பா மற்றும் குடியிருப்பில், பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.* காட்டூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ராம் நகர், பகுதியில் உள்ள லெமன் பார்க் ஓட்டலில் உள்ள, '79 சலுான் நெயில் ஆர்ட் பியூட்டி ஸ்பா'வில், போலீசார் சோதனை செய்த போது, வெளி மாநிலத்தை சேர்ந்த மூன்று பெண்கள், கோவை பூமார்க்கெட்டை சேர்ந்த பிரமோத் குமார்,24 ஆகியோர் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆசிர் மனோவா, மணி பிரபு ஆகியோரை, தேடி வருகின்றனர்.* சிங்காநல்லுார் போலீசார் சோதனை செய்ததில், நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் செய்து வந்த, மூன்று பெண்களை கைது செய்தனர்.* பீளமேடு போலீசார், அவிநாசி சாலையில் உள்ள 'துலிப் ஸ்பா' வில் சோதனை செய்த போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை, கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 86 ஆயிரம் பணம், மொபைல் போன், கார்டு ஸ்வைப் மெஷின் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழன்
ஜன 29, 2025 02:18

இரவு 11 மணிக்கு மேல் சரவணம்பட்டியிலிருந்து துடியலூர் செல்லும் சாலையில் டான் பாஸ்கோ பள்ளியை தாண்டி ஒரு வளைவில் தினமும் திருநங்கைகள் சாலையோரம் நின்று கொண்டு விபச்சாரத்திற்கு அழைப்பதையே வாடிக்கை இதே போல சரவணம்பட்டியிலிருந்து காளப்பட்டி செல்லும் சாலையிலும் 1.5 கிலோமீட்டரில் உள்ள வளைவின் அருகில் சாலையோரம் இதே போல விபச்சாரத்திற்கு அழைப்பதையே வாடிக்கையாக நடக்கிறது நான் தினமும் காலை 11 மணியிலிருந்து இரவு 2 மணி வரை ஜொமேட்டோ உணவு டெலிவரி செய்து வருகிறேன் அப்போது தினமும் இதை பார்க்கிறேன்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 29, 2025 10:28

நண்பரே இந்த செய்தியை நூறு சதவீதம் அப்படியே எடுத்துக் கொள்ளாதீர்கள். கழக காவல் துறைக்கு கப்பம் கட்டாதவர்கள் மட்டுமே பிடிபடுவார்கள்.


சமீபத்திய செய்தி