கட்டுமான பொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சிவில் இன்ஜினியர் சங்கத்தின் சார்பில், பஸ் ஸ்டாண்ட் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஆசிக் வரவேற்றார். பொருளாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்டுமான பொருட்களான எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் ஆகியவற்றின் விலை உயர்வு கண்டித்தக்கது. மேலும், இந்த விலை உயர்வால், கட்டடங்கள் கட்டுமான பணிகள் பாதிப்படைகின்றன. இதனால் நூற்றுக்கணக்கான கட்டட தொழிலாளர்கள், வேலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு, கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி, விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் வலியுறுத்தி பேசப்பட்டது.கூட்டத்தில் சிவில் இன்ஜினியர்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஏராளமானவர்கள் பங்கேற்றனர். உதவித் தலைவர் அல்டாப் நன்றி கூறினார்.