உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனமகிழ் மன்ற பார் கணியூரில் எதிர்ப்பு

மனமகிழ் மன்ற பார் கணியூரில் எதிர்ப்பு

கருமத்தம்பட்டி; கணியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நவீன வசதிகளுடன் பார் துவக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட, மூன்றாவது வார்டு பகுதியில் புதுப்பாளையம், தட்டாம்புதூர், லட்சுமி நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. தனியார் பள்ளி மற்றும் கல்லூரி செயல்படுகின்றன. பல கோவில்கள் உள்ளன.இப்பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் பார் துவக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:பல ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்துதல், மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்டு மாவட்ட அளவில் சிறந்த ஊராட்சியாக, கணியூர் பெயர் பெற்றுள்ளது. ஐ.எஸ். ஓ.,தரச்சான்று பெற்றுள்ளது. இதுவரை எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை இல்லை. தற்போது, மூன்றாவது வார்டு பகுதியில், தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் பார் துவக்கும் பணிகள் நடக்கின்றன. அக்கடை திறக்கப்பட்டால், மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும். அதனால், மாவட்ட நிர்வாகம் நவீன பாருக்கு அனுமதி தரக்கூடாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி