உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் :ரேஷனில் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

 பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் :ரேஷனில் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

சூலுார்: ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக்கோரி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், ராவத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும், எனக்கோரி, ரேஷன் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ராவத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து, தேங்காய் எண்ணெய் விற்க கோரி கோஷங்களை எழுப்பினர். 'பல ஆயிரம் கோடி செலவு செய்து, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதிலாக, உள்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும். சத்துணவு கூடங்களிலும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக நம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஏர்முனை நிர்வாகி சுரேஷ், ரவிக்குமார், முத்துசாமி, மயில்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி