உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

கோவை; தமிழகத்தில் 1,841 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. 5,000 மக்கள் தொகைக்கு, ஒரு கிரேடு-2 சுகாதார ஆய்வாளர்கள் வீதம், 2,500 பேர் நியமிக்க வேண்டும். ஆனால், 50 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். காலியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், கோவை பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் கூறுகையில், ''கிரேடு-1 பிரிவில் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. கிரேடு-2 பிரிவில் 2,500 பேர் இருக்க வேண்டிய இடத்தில், 50 பேரே பணிபுரிகின்றனர். காலி பணியிடங்கள் நிரப்ப பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்களுக்கு ஊதியத்தை குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வு வழங்க கலந்தாய்வு தேதி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை