உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலெக்டர் அறிவித்த கூலி வழங்கக்கோரி போராட்டம்

கலெக்டர் அறிவித்த கூலி வழங்கக்கோரி போராட்டம்

வால்பாறை; வால்பாறை நகராட்சியில், 52 துாய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு, பி.எப்., பிடித்தம் போக 450 ரூபாய் தினக் கூலியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் கலெக்டர் அறிவித்துள்ள கூலி, 700 ரூபாய் வழங்கக்கோரி, துாய்மை பணியாளர்கள் நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'வால்பாறை மலைப்பிரதேசத்தில் கொட்டும் மழையிலும் காலை, 6:30 மணி முதல் மதியம், 2:00 மணி வரை வீடு மற்றும் கடைகளில் நேரடியாக சென்று குப்பையை சேகரிக்கிறோம். எங்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவித்தபடி தினக்கூலியாக, 700 ரூபாய் வழங்க வேண்டும். மேலும் காலை நேரத்தில் அம்மா உணவகத்தில் துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும்' என்றனர். காலை முதல் மதியம், 1:00 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களிடம் வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சு மு கமாக பேசி, 6ம் தேதி (நாளை) கமிஷனர் மற்றும் ஒப்பந்ததாரர் முன்னிலையில், கூலி உயர்வு குறித்து பேசி தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, துாய்மை பணியாளர்கள் ஆறு மணி நேர போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை