உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போராட அனுமதி கேட்டு போராட்டம்!

போராட அனுமதி கேட்டு போராட்டம்!

கோவை; ஜனநாயக அடிப்படையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பதை கண்டித்து, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் தங்கவேல் பேசியதாவது:தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக, அமைதியான முறையில் நடத்தும் போராட்டம் மற்றும் பேரணிக்கு அனுமதி கோரும் போது, போலீசார் அனுமதி அளிப்பதில்லை. அப்படியே அனுமதி அளித்தாலும், மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் மட்டுமே நடத்த அனுமதி தரப்படுகிறது.போராட்டத்தின் முக்கிய நோக்கம், மக்களின் கோரிக்கைகளை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதுதான். சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில், அமைதியான முறையில் போராட்டம் நடத்த, போலீசார் அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், செல்வம், சுப்ரமணியம், வக்கீல் சக்திவேல் உள்ளிட்ட 100 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை