மேலும் செய்திகள்
மருதமலை உண்டியலில் ரூ.91.70 லட்சம் காணிக்கை
07-Mar-2025
தொண்டாமுத்தூர்: வடவள்ளியில், உலக தமிழ் காப்பு கூட்டியக்கம் மற்றும் தமிழ் சமுதாய இலக்கிய அமைப்புகள் சார்பில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி முழக்கப்போராட்டம் நடந்தது.முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், வரும், ஏப்., 4ம் தேதி, குடமுழுக்கு நடக்கிறது. இந்நிலையில், உலக தமிழ் காப்பு கூட்டியக்கம் மற்றும் தமிழ் சமுதாய இலக்கிய அமைப்புகள் சார்பில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி, முழக்கப்போராட்டம், வடவள்ளி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு, தமிழ் காப்பு கூட்டு இயக்கம் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில், தமிழ் கடவுளான முருகப்பெருமானின் குடமுழுக்கு தமிழில் நடக்க வேண்டும். தமிழக அரசு அனுமதிக்காவிட்டால், யாகசாலையில் நுழைந்து தமிழில் பூஜைகள் நடத்துவோம் என, கோஷங்கள் எழுப்பினர். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
07-Mar-2025