உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மசோதாவை ரத்து செய்யக்கோரி வரும் 13ல் போராட்டம்

மசோதாவை ரத்து செய்யக்கோரி வரும் 13ல் போராட்டம்

வால்பாறை: வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாதிக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சூழல் நுண் உணர்வு மசோதா வரைவு அறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என, 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்க அமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும், 9ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.இந்நிலையில், எல்.பி.எப்., தொழிற்சங்க பொதுசெயலாளர் வினோத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூழல் நுண் உணர்வு மசோதாவை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் வால்பாறையில் தைப்பூசத்திருவிழா நடக்கிறது. எனவே, உண்ணாவிர போராட்டம், வரும், 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ