உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு ஸ்கூல்பேக் வழங்கல்

மாணவர்களுக்கு ஸ்கூல்பேக் வழங்கல்

வால்பாறை : நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்கூல்பேக்' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வால்பாறை தாலுகாவில், 79 அரசு துவக்கப்பள்ளிகளும், 14 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில், 1675 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பாடபுத்தகம், நோட்டு, பள்ளி சீருடை இலவசமாக வழங்கப்படுகின்றன.தற்போது, அனைத்து துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும், ஸ்கூல் பேக், வண்ண பென்சில்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறை நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் ரஞ்சித் தலைமை வகித்தார்.'வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம், மாணவர்களுக்கு ஸ்கூல்பேக், வண்ண பென்சில்களை வழங்கி பேசும் போது, மாணவர்கள் படிப்பில் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும். மொபைல்போன்கள் பயன்படுத்துவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.மாணவர்களின் பெற்றோர் அடிக்கடி பள்ளிக்கு சென்று, குழந்தைகளின் கல்வித்தரம் குறித்தும், பள்ளியின் செயல்பாடும் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிய வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ