மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்் கூட்டம்
11-Jun-2025
வால்பாறை; வால்பாறையில், தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கோவை 'விஸ்டியாவ்' தொழில் நுட்ப சேவை மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் முன்னிலையில் நடந்தது. தொழில்நுட்ப சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரபா வரவேற்றார்.விழாவில், தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி ஆகியோர் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.முகாமில் கலந்து கொண்ட, 40 பயனாளிகளுக்கு வீல்சேர், செயற்கை கை மற்றும் கால் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
11-Jun-2025