உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., பிசியோதெரபி கல்லுாரி பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி., பிசியோதெரபி கல்லுாரி பட்டமளிப்பு விழா

கோவை; பி.எஸ்.ஜி., பிசியோதெரபி கல்லுாரியின், 21வது பட்டமளிப்பு விழா, பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி கலையரங்கில் நடந்தது. பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளைகளின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.சென்னை, வலி மற்றும் பக்கவாத மறுவாழ்வு மையத்தின் (பி.எஸ்.ஆர்.சி.,) நரம்பியல் இயக்குனர் ரவி ரங்கநாதன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 27 தங்கப் பதக்கங்கள் வென்றவர்கள் உட்பட மொத்தம், 137 இளங்கலை மற்றும் 61 முதுகலை மாணவர்ளுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.இளங்கலை பட்டத்திற்கான சிறந்த அவுட்கோயிங் விருதுகள், மாணவர்கள் கிளாட்வின் மஹிபன், லேகாஸ்ரீ, சஹானா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களும், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.பி.எஸ்.ஜி., பிசியோதெரபி கல்லுாரியின் முதல்வர் மகேஷ், துணை முதல்வர் அஷ்ரப் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை