பி.எஸ்.ஜி., டிராபி கூடைப்பந்து போட்டி துவக்கம்; தமிழகத்தில் தலைசிறந்த 35 அணி வீரர்கள் களம்
கோவை; மாநில அளவிலான 'பி.எஸ்.ஜி., டிராபி' கூடைப்பந்து போட்டியில், 35 அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி கூடைப்பந்து அரங்கில், 'பி.எஸ்.ஜி., டிராபி', 9வது மாநில அளவிலான பொன் விழா ஆண்டு கூடைப்பந்து போட்டி கடந்த, 16 முதல், 20ம் தேதி வரை நடக்கிறது. ஆண்களுக்கான இப்போட்டியில், கோவை, நீலகிரி, திருப்பூர், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 35 அணிகள் களம் இறங்கியுள்ளன.முதல் போட்டியில், பிரெண்ட்ஸ் பி.பி.சி., அணியும், சிக்சர்ஸ் பி.பி.ஏ., அணியும் மோதின. இதில், சிக்சர்ஸ் அணி, 87-41 என்ற புள்ளிகளில் பிரெண்ட்ஸ் அணியை வென்றது. தொடர்ந்து, குமரகுரு பி.பி.ஏ., அணி, 84-17 என்ற புள்ளிகளில் பாரதி பிரீமியம் பி.பி.சி., அணியை வென்றது.கோவை ஆர்.எஸ்.சி., அணி, 98-51 என்ற புள்ளிகளில் கோவை டெர்ரிஸ் பி.பி.ஏ., அணியையும், சண்டே ஸ்டார்ஸ் பி.பி.ஏ., அணி, 77-67 என்ற புள்ளிகளில் பீளமேடு அணியையும், ஜெயபாரதி பி.பி.சி., அணி, 98-38 என்ற புள்ளிகளில் மான்ஸ்டர் பி.பி.சி., அணியையும் வென்றது.அன்னுார் பி.பி.ஏ., அணி, 89-44 என்ற புள்ளிகளில் எஸ்.எஸ்.என்., பி.பி.ஏ., அணியையும், மவுன்டெயின் கேஜர்ஸ் அணி, 49-36 என்ற புள்ளிகளில் டெக்ஸ்சிட்டி பி.பி.சி., அணியையும், பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்.ஆர்., அணி, 69-67 என்ற புள்ளிகளில் நைட்சிட்டி பி.பி.சி., அணியையும் வென்றன.ராம்ஸ் பி.பி.ஏ., அணி, 70-56 என்ற புள்ளிகளில், சதர்ன் வாரியர்ஸ் அணியையும், கே.பி.ஆர்., அகாடமி அணி, 102-91 என்ற புள்ளிகளில் கரூர் டெக்ஸ்சிட்டி பி.பி.சி., அணியையும் வென்றன. தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.