உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகருக்குள் யானை விசிட் அச்சத்தில் பொதுமக்கள்

நகருக்குள் யானை விசிட் அச்சத்தில் பொதுமக்கள்

வால்பாறை:வால்பாறை கக்கன் காலனி பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள உத்தரகாளியம்மன் கோவில் பின்பக்கம், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு குட்டியுடன் வந்த மூன்று யானைகள், தொழிலாளியின் வீட்டு பின்பக்கம் உள்ள வாழைகளை உட்கொண்டன. சப்தம் கேட்டு எழுந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த, மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் அரை மணி நேரத்திற்கு பின், யானைகள வனப்பகுதிக்குள் விரட்டினர். எஸ்டேட் பகுதியில் மட்டுமே உலா வந்த யானைகள், மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகருக்குள் விசிட் செய்ததால், மக்கள் பீதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை