உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா

மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா

அன்னூர் : கோவை அருகே மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று நடந்த புரட்டாசி திருவிழாவில், பல ஆயிரம் பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.கோவை மாவட்டம், அன்னூர் அடுத்து உள்ள மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. திருப்பதி கோவிலை போலவே, இக்கோவிலும், ஏழு குன்றுகளுக்கு அடுத்து அமைந்துள்ளது.இக்கோவிலில் புரட்டாசி திருவிழா, கடந்த 14ம் தேதி துவங்கியது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதர, வெங்கடேச பெருமாளுக்கு மகாபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது.இதையடுத்து, கோவில் வளாகத்தில், காலை 10:00 மணிக்கு, பசூர் மற்றும் பகத்தூர் பஜனை குழுவின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. கோவில் முன்புறம் நூற்றுக்கும் மேற்பட்ட தாசர்கள் சங்கு, சேகண்டியுடன் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர்.கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல ஆயிரம் பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று, பெருமாளை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.திருப்பூர், கோவை மற்றும் புளியம்பட்டியில் இருந்து, மொண்டிபாளையம் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.வரும் 28ம் தேதி காலை 4:00 மணிக்கு மகாபிஷேகமும், காலை 10:00 மணிக்கு, பஜனையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை