உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஸ்கோர்ஸ், கரும்புக்கடையில் 124 கிலோ குட்கா பறிமுதல்

ரேஸ்கோர்ஸ், கரும்புக்கடையில் 124 கிலோ குட்கா பறிமுதல்

கோவை: மாநகர பகுதிகளில் நேற்று நடந்த சோதனையில், 124 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாநகர பகுதிகளில், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க, தொடர் சோதனைகள் நடத்தப்படுகின்றன. ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், அப்பகுதியில் இருந்த பேக்கரி ஒன்றில் இருந்து 110 கிலோ 450 கிராம் குட்கா பொருட்களை, பறிமுதல் செய்தனர். கரும்புக்கடை பகுதியில் இருந்து சுமார் 500 கிராம் மற்றும் பீளமேடு பகுதியில் 13 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குட்கா பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ய, பதுக்கி வைத்திருந்தவர்களை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !