உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்டவாளம் பராமரிப்பு ரயில் இயக்கம் மாற்றம்

தண்டவாளம் பராமரிப்பு ரயில் இயக்கம் மாற்றம்

கோவை: ஈரோடு–கரூர் இடையே 7, 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28ம் தேதிகளிலும் ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இத்தேதிகளில் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6:30க்கு திருச்சி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16844) கொடுமுடி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பின்னர் முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக திருச்சி வரை இயக்கப்படும். அதேபோல், கோவையில் இருந்து காலை 8:00க்கு நாகர்கோவில் புறப்படும் ரயில்(16322) போத்தனுார், பொள்ளாச்சி, பழநி வழியாக இயக்கப்படும். வழக்கமான வழித்தடமான வடகோவை, பீளமேடு, சிங்காநல்லுார், திருப்பூர், ஊத்துக்குளி ஸ்டேஷன்கள் வழியாக செல்லாது என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !