உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், நேற்று பாலக்காடு கோட்ட மேலாளர் அருண்குமார் சதுர்வேதி ஆய்வு மேற்கொண்டார். இதில், ரயில்வே ஸ்டேஷன் நிறைகள், குறைகள் குறித்து பயணியர் மற்றும் ரயில்வே சங்கத்தினரிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, ரயில்வே நடைமேடை, தண்டவாளங்கள், சிக்னல் போன்றவைகளை ஆய்வு செய்தார். இறுதியாக ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், கோட்ட மேலாளரிடம், தற்போது உள்ள நடைமேடை அளவு, 18 பெட்டிகள் நிற்கும் அளவில் உள்ளது. ஆனால், கோவை ரயிலில் 24 பெட்டிகள் இருப்பதால் பயணியர் சிலர், தண்டவாள பகுதியில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது.எனவே, நடை மேடையை நீடிக்க வேண்டும். மேலும், ரயில்வே ஸ்டேஷனில் 'ரிசர்வேஷன் கவுன்டர்', ரயில் வரும் நேரம் குறித்த டிஜிட்டலில் பெயர் பலகை வேண்டும், என, கோரிக்கை வைத்தனர்.மேலும், ரயில் பயணியர் நலச்சங்கத்தின் சார்பில், மயிலாடுதுறை விரைவு ரயில் கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு இயக்க வேண்டும் என, மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ