உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையை குளிர வைத்த மழை

கோவையை குளிர வைத்த மழை

கோவை; கோவையில் பெய்த கனமழையால், கோவை நகரம் குளிர்ச்சி அடைந்துள்ளது.தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக, கோவையில் மழைத்துாறல் இருந்தது.நேற்று மாலை கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. காந்திபுரம், கணபதி, ஆர்.எஸ்.புரம், சாயிபாபாகாலனி, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில், பெய்த மழையால் வீதிகளில் மழைநீர் பெருகி ஓடியது. இன்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வரும் 9ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !