உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி ஆறு விக்கெட் வீழ்த்திய ரெயின்போ வீரர்

மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி ஆறு விக்கெட் வீழ்த்திய ரெயின்போ வீரர்

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மூன்றாவது டிவிஷன் போட்டிகள் ஸ்ரீ சக்தி மைதானம் உட்பட பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன கிரிக்கெட் கிளப் அணியும், ரெயின்போ கே.எம்.பி., கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த ஸ்ரீ சக்தி கிளப் அணி, 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 98 ரன்கள் எடுத்தது. எதிரணி வீரர் நிவாஷ் ஆறு விக்கெட்கள் வீழ்த்தினார்.ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியினர், 17.3 ஓவரில், 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணி வீரர்கள் முரளிதரன், 49 ரன்களும், பிர்திவ், 30 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.நான்காவது டிவிஷன் போட்டியில், கோயம்புத்துார் கிரிக்கெட் கிளப் அணியும், ஆர்.பி., குரூப்ஸ் அணியும் மோதின.பேட்டிங் செய்த கோயம்புத்துார் கிரிக்கெட் கிளப் அணி, 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 198 ரன்கள் எடுத்தனர். வீரர் விஷ்ணு பிரியன், 43 ரன்கள், தினேஷ்குமார், 40 ரன்கள், ஆதவன், 37 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர்.எதிரணி வீரர் ஜெரால்டு சுசில் பிரசாத், நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். ஆர்.பி., குரூப்ஸ் அணியினர், 29.5 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 199 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றனர்.வீரர்கள் அஜய், 78 ரன்களும், அசவத், 52 ரன்கள், பிரவீன்குமார், 37 ரன்களும் குவித்தனர். எதிரணி வீரர் சாமிநாதன் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ